முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 பெண்களின் பெயர் பரிந்துரை : நீதிபதி பி.வி. நாகரத்னாவுக்கு அதிக வாய்ப்பு?!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2021, 1:29 pm
உச்சநீதிமன்றம் நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக்குழுவான கொலிஜியம் மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த வருடம் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி நாகரத்னா, தெலுங்கான உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி உள்ளிட்ட மூன்று பெண் நீதிபதிகளின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கொலீஜியத்தின் பரிந்துரையை பரிசீலித்து, நீதிபதி பி.வி. நாகரத்னா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 2027-இல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார்.
0
2