கேரளாவில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் தளர்வுகள் அறிவிப்பு: இன்று முதல் அமலுக்கு வந்தன..!!

17 June 2021, 9:29 am
kerala_lockdown_updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளன.

கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 2 தினங்களுக்கு முன் வெளியிட்டார். இந்த சூழலில், ஊரடங்கில் தளர்வுகள் இன்று காலை 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி, 8 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கம்போல் செயல்படவும், கடைகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். பகுதியளவில் பொது போக்குவரத்து செயல்படும்.

Vijayan - updatenews360

அனைத்து நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். இன்று முதல் பார்கள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு விகிதம் அடிப்படையில், எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், கேரளா முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் தொடரும்.

கேரளாவில் ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு வேலைக்கு செல்லும் மக்கள் ஆட்டோ, பேருந்து ஆகிய வசதிகளை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Views: - 198

0

0