இனி ஒவ்வொரு மது பாட்டில் மீது ரூ.10 வரி : முதலமைச்சர் அறிவிப்பு… மக்கள் வரவேற்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 3:22 pm
Liquor Tax - Updatenews360
Quick Share

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார்.

மாநிலத்தில் ஆட்சி அமைத்த பின்னர் காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் சுக்விந்தர் தாக்கல் செய்தார்.
அப்போது 2023 -24ம் ஆண்டுக்கான ரூ.53,413 கோடி பட்ஜெட்டை அவர் சமர்ப்பித்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதன்படி, இமாச்சல பிரதேசத்தில் விற்கப்படும் ஒவ்வொரு மது பாட்டில் மீதும் இனிமேல் ரூ.10 செஸ் வரி விதிக்கப்படும். அதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அந்தப் பணம் நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.

இதனால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.416 கோடி செலவாகும். இமாச்சல பிரதேசத்தை 2026-ம் ஆண்டுக்குள் பசுமை மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

அதற்காக மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை சுக்விந்தர் வெளியிட்டார்.

Views: - 230

0

0