கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் ஊசி விற்ற 75 பேருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம்..! ம.பி. அரசு அதிரடி..!

13 May 2021, 8:55 pm
VACCINE_UpdateNews360
Quick Share

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 பேருக்கு எதிராக மத்திய பிரதேச அரசு கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தை (என்எஸ்ஏ) நடைமுறைப்படுத்தியுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இந்த 75 நபர்களை ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் சிறைகளுக்கு அனுப்பியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

“நடைமுறையின்படி, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்ற 37 நபர்களுக்கு எதிராக என்எஸ்ஏவை உறுதிப்படுத்தியுள்ளோம். அதே சட்டத்தின் கீழ் 38 பேருக்கு எதிரான திட்டத்தையும் நாளைக்குள் உறுதி செய்வோம்” என்று கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் ராஜோரா தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மாநில அரசு உறுதிப்படுத்திய 37 குற்றவாளிகளில், தலா ஒன்பது பேர் இந்தூர் மற்றும் உஜ்ஜைனைச் சேர்ந்தவர்கள். குவாலியர், ஜபல்பூர் மற்றும் ஷாஹ்தோல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா நான்கு பேர், போபால் மற்றும் தார் ஆகிய இடங்களில் இருந்து தலா இரண்டு மற்றும் மாண்ட்சூர், சிந்த்வாரா மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒருவர் அடங்குவர்.

இந்தூரில் மற்ற 30 பேர் மற்றும் போபாலில் எட்டு பேருக்கு எதிராக நாளைக்குள் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஜபல்பூர் மற்றும் உஜ்ஜைனில் தலா இரண்டு நபர்களுக்கும், சாகர் மற்றும் சட்னாவில் தலா ஒரு நபருக்கும் எதிராக இந்த இரண்டு கடுமையான சட்டங்களின் கீழ் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்கள் 6 பேரையும் மாவட்ட அதிகாரிகள் சிறைகளுக்கு அனுப்பினர்.

Views: - 141

0

0