தோட்டத்தில் பூப்பறித்த சிறுமி.., ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட 40 குடும்பங்கள்.., காரணம்.?
24 August 2020, 11:27 amஒடிசா மாநிலத்தில், மாற்று சாதியினர் தோட்டத்தில் சிறுமி பூப்பறித்ததற்காக 40 குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
தென்கனல் மாவட்டத்தில் மாற்று சாதியினர் தோட்டம் ஒன்றில் பட்டியலின சிறுமி பூ பறித்ததால் அப்பகுதியில் உள்ள 40 பட்டியலின குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேரியுள்ளது.
அங்குள்ள கண்டியோ கட்டெனி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 40 குடும்பங்கள் பட்டயலினத்தை சேர்ந்தவர்கள். இந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் உயர் சாதியினர் ஒருவரின் வீட்டு தோட்டத்தில் பூ பறித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த உயர் சாதியினர், அந்த கிராமத்தில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த 40 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால், இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு வழங்கக்கூடிய ரேஷன் போருட்களை கூட வாங்க முடியாத நிலையில் அவர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை முடித்து வைத்தனர்.