டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: ஒடிஷா அரசு அறிவிப்பு…!!

7 November 2020, 8:46 am
Government of Odisha
Quick Share

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டு இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், எண்ணற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே, ஆயிரக்கணக்கான ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மூடப்படுவதாக ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0