”இடுப்ப தொடறான், கிள்ளறான்” பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த அதிகாரிக்கு கும்மாங்குத்து : அலறிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 12:58 pm
Sexual Harrassment - Updatenews360
Quick Share

ஆந்திரா : பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவருக்கு கும்மாங்குத்து கொடுத்த பெண்ணின் கணவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட பிற்படுத்தப்படோர் சங்க தலைவராக பணியாற்றியவர் மங்களகிரிபட்டினத்தை சேர்ந்த ரங்கநாத். ரங்கநாத் பதவியில் இருந்த போது சங்கத்தின் சக பெண் உறுப்பினர்கள் பலரிடம் கைமாற்றாக பணம் வாங்கிக் கொடுத்து திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்.

மேலும் சில பெண் உறுப்பினர்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்று புகார்கள் உள்ளன. எனவே அவர் பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் சக பெண் உறுப்பினர் ஒருவரிடம் இருந்து பணம் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது, மேலும் ஒரு பெண் உறுப்பினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் மீது மங்களகிரி காவல் நிலையம் மற்றும் தாடி பத்திரி காவல் நிலைய ஆகியவற்றில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிற்படுத்தப்பட்டோர் சங்க பெண் உறுப்பினர் ஒருவரிடம் ரங்கநாத் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அந்த பெண் தன்னுடைய கணவரிடம் ரங்கநாத்தின் சில்மிஷ முயற்சி பற்றி கூறினார்.

அப்போது அவருடைய கணவர் மனைவியுடன் சேர்ந்து ரங்கநாத் வீட்டுக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார். வலி தாங்க முடியாத அதிகாரி ரங்கநாத் ஐயோ, அம்மா என்று அலறினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த மங்களகிரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Views: - 673

1

0