உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை..!

14 February 2020, 11:01 am
Quick Share

டெல்லி: உமர் அப்துல்லா சகோதரி அவரது தடுப்புக்காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “பாராளுமன்ற உறுப்பினராக நாட்டுக்காக பணியாற்றியவர், மாநில முதல்வராக இருந்தவர், மத்திய அமைச்சராகயாக இருந்த உமர் அப்துல்லாவால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. என்றும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ம் தேதி இரவு முதல் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்”என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.