இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி..!!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 8:28 pm
Quick Share

பெங்களூரூ : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்ரிக்க உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான், தற்போது பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. டெல்டா உள்ளிட்ட பிற தொற்றுக்களை விட இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக ஆபத்து உள்ளதாகவும், இது டெல்டா வகை வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்த விமானங்கள் மூலம் வருபவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் முதன்முதலாக கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் மாநிலங்களுக்கு வந்தவர்களுக்கும் இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா, தென்னாப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும், டெல்லி, குஜராத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.

ஒமிக்ரான் தொற்று 40க்கும் மேற்பட்ட நாடுகளில்பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 254

0

0