ஒரு டோஸ் கோவாக்சின் + மறு டோஸ் கோவிஷீல்டு = நோய் எதிர்ப்பு சக்தி : ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 12:56 pm
Vaccine Plus Shield- Updatenews360
Quick Share

ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி, மற்றொரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி என வேறுவேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழுவான டிசிஜிஐ, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த கடந்த மாதம் பரிந்துரைத்தது.
அடினோவைரஸ் வெக்டர் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான ஆய்வில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்றும், இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) இத்தகைய ஆய்வை நடத்த அனுமதி கோரிய பிறகு டிசிஜிஐ இந்த பரிந்துரையை செய்தது.

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, கோவிட் -19 தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை கலந்து 300 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் 4வது கட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேலூர் சிஎம்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Views: - 651

1

0