பழங்குடி மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு..! திரிபுராவில் வெடித்தது வன்முறை..!

21 November 2020, 7:57 pm
Tripura_Clash_UpdateNews360
Quick Share

திரிபுராவில் இன்று ஒரு கும்பல் திடீரென வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

ஆயிரக்கணக்கான பழங்குடி அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்ப்பதற்காக வடக்கு திரிபுராவில் கடந்த ஆறு நாட்களாக நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. இந்த அகதிகள் 23 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தில் ஏற்பட்ட இன மோதல்களைத் தொடர்ந்து அருகிலுள்ள மிசோரமுக்கு தப்பியது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர் 45 வயதான ஸ்ரீகாந்த தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வடக்கு திரிபுரா மாவட்டம் பானிசாகரில் பாதுகாப்புப் படையினரைத் தாக்கிய கிளர்ச்சிக் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததால் மேலும் 5 பேர் பலத்த காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“வன்முறை வெடிக்கும் சூழ்நிலையைச் சமாளிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான திரிபுரா ஸ்டேட் ரைபிள்ஸ் துருப்புக்கள் உட்பட பாதுகாப்புப் படையினர் பெரும் எண்ணிக்கையில் பானிசாகர் மற்றும் காஞ்சன்பூர் துணைப்பிரிவுகளில் (வடக்கு திரிபுரா மாவட்டத்தில்) அணிதிரட்டப்பட்டனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி பெயர் வெளியிட விரும்பாமல் கூறினார்.

இதற்கிடையில், ஆறாவது நாளாக திரிபுராவின் காஞ்சன்பூர் துணைப்பிரிவில் நிலைமை வெடிக்கும் நிலையில் இருந்தது. இன மோதலைத் தொடர்ந்து 1997 அக்டோபரில் அருகிலுள்ள மிசோரமுக்கு தப்பி ஓடிய 35,000 ரீங் பழங்குடி அகதிகளுக்கு மறுவாழ்வு வழங்க திரிபுரா மற்றும் மத்திய அரசு எடுத்த முடிவை எதிர்த்து கூட்டு இயக்கக் குழு காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது.

கடந்த வியாழக்கிழமை முதல் போராட்டங்கள் அருகிலுள்ள துணைப்பிரிவுகள் மற்றும் மாவட்டங்களில் நீட்டிக்கப்பட்டன. மாநில நிர்வாகங்கள் சூழ்நிலைகளைத் தணிக்கவும் போராட்டக்காரர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தி தீர்வு காணவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் போராட்டம் தீவிரமடைந்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Views: - 19

0

0