புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் உரை

Author: Udayaraman
26 July 2021, 11:28 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

டெல்லி: புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29ல் உரையாற்றுகிறார்.

கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்வி கொள்கை இயற்றப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஒப்புதல் அளித்தது.இதன் ஓராண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக வியாழன்(ஜூலை 29) உரையாற்றுகிறார். புதிய கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்படுவது குறித்தும், புதிய திட்டங்கள், அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிகிறது.

Views: - 149

0

0