கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட உம்மன்சாண்டி உடல், அவரது பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து இரவு 8 மணிக்கு புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அங்கிருந்து கேரள காங்கிரஸ் மாநில தலைமையகமான இந்திரா பவனுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து இரவு உம்மன் சாண்டியின் உடல் திருவனந்தபுரத்திலுள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து நேற்று காலை 7 மணிக்கு உம்மன்சாண்டியின் உடல் ஊர்வலமாக புறப்பட்டது. திருவனந்தபுரம் மட்டுமல்லாமல் வழிநெடுக அவர் உடலுக்கு காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனால் கொல்லம் மாவட்டத்தை சென்றடைய 8 மணி நேரம் ஆனது. இரவு 9 மணிக்கு கொட்டாரக்கரையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) காலையில் கோட்டயம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன்சாண்டி உடல் அடக்கம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உடல் அடக்கம் அரசு மரியாதையின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது உம்மன்சாண்டி சிகிச்சையில் இருந்த போது நான் மரணம் அடைந்த பின் அரசு மரியாதையின்றி எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி, மகன் மற்றும் மகள்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.
அதன்படி அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு மரியாதை இன்றி உடல் அடக்கம் நடைபெறும் என்று அவரது மகன் சாண்டி உம்மன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறினார். உம்மன் சாண்டியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதாக தலைமை செயலாளர் டாக்டர் வேணு அறிவித்து உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.