மதுபானங்களுக்கு என்றே தனி மியூசியம்: ஆதிகாலம் முதல் இண்டர்நேஷனல் வரை எல்லாமே இருக்கு…எங்கனு தெரியுமா?

Author: Aarthi Sivakumar
18 October 2021, 11:49 am
alchol museaum - updatenews360
Quick Share

கோவா : ஆதிகாலம் முதல் தற்போது வரையிலான அனைத்து வகையிலான மதுபானங்களுக்கும் பிரத்யேகமான மியூசியம் ஒன்று கோவாவில் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடரில் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் அனைத்து வகையான மதுபானங்களுக்கு என்றே பிரத்யேகமான அருங்காட்சியகம் ஒன்று கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்துக்கு ‘All About Alcohol’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வடக்கு கோவாவில் உள்ள காண்டொலிம் கிராமத்தில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.

இந்த அருங்காட்சியகத்தில் கோவாவின் பாரம்பரிய மதுபானமான ஃபெனி முதல் சர்வதேச மதுபான பிராண்டுகள் வரை அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவாவில் மதுபானத்துடன் தொடர்புடைய வரலாற்றை பறைசாற்றுவதே இந்த அருங்காட்சியத்தின் நோக்கம் என அதை அமைத்த தொழிலதிபர் நந்தன் கூறுகிறார். ஸ்காட்லாந்திலும், ரஷ்யாவிலும் மதுவை கொண்டாடுகின்றனர். அவர்கள் மதுபானங்களை பெருமையாக காட்சிப்படுத்துகின்றனர்.

ஆனால் இந்தியாவில் மதுபானம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் முதல் மதுபான அருங்காட்சியகத்தை அமைக்க முடிவு செய்தேன். கோவா மக்களுக்கு மது என்பது விருந்தோம்பலின் அடையாளம் அதை மெய்ப்பிப்பது போல இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் அனைவருக்கும் ஃபெனி மதுபானம் தான் வெல்கம் ட்ரிங்க்.

Image
courtesy

16ம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட மது குடிக்கும் கண்ணாடி பாத்திரங்கள், மதுவை அளவிடும் குடுவை, மண்பாண்டங்கள், ஆஸ்திரேலியாவின் படிக்க கண்ணாடிகள் என்று மது சார்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்கால மது தயாரிக்கும் உபகரணங்களுடன் மது தயாரிப்பின் பாரம்பரியம் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த வரலாற்று தகவல்களும் இங்கு உள்ளன.

Views: - 386

0

0