முதலமைச்சரின் பேனரை கிழித்து எதிர்க்கட்சியினர் அடாவடி : எதிர்க்கட்சி தலைவரின் சுற்றுபயணத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2022, 6:23 pm
Tirupati opposite Parties -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடுவை வரவேற்ற தொண்டர்கள் உற்சாகத்தில் ஆளுங்கட்சியினரின் பேனரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று துவங்கி மூன்று நாட்கள் தன்னுடைய சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக இன்று மதியம் சந்திரபாபு நாயுடு குப்பம் வந்து சேர்ந்தார். இந்த நிலையில் அவரை வரவேற்கும் வகையில் குப்பம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் கட்சி கொடிகள், தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து உள்ளனர்.

ஓரிடத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி படத்துடன் கூடிய பேனர் ஒன்று காணப்பட்டது. சந்திரபாபு நாயுடுவை வரவேற்பதற்காக உற்சாகத்தில் இருந்த தொண்டர்கள் கண்ணில்பட்டது அந்த ஆளும் கட்சி பேனர்.

இதனால் அதி உற்சாகம் அடைந்த கட்சி தொண்டர்கள் சுவர் மீது ஏறி அந்த பேனரை கிழித்தனர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

Views: - 519

0

0