டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்: பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…உஷார்..!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 1:42 pm
Quick Share

புதுடெல்லி: டெல்லிக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

டெல்லிக்கு இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லியில் செப்., 11ம் தேதி பெய்த கனமழையால் டெல்லி விமான நிலையம் மற்றும் பல பகுதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், டெல்லியில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரப்பதம் சுமார் 92 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாக இருக்கும்.

இதுவரை நாட்டின் தலைநகர் டெல்லியில் 1,146.4 மி.மீ., ஆண்டு மழை பெய்துள்ளது. இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம் ஆகும். இந்த கனமழையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது.

டெல்லிக்கு செல்லும் நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம என ஐந்து விமானங்கள் அண்டை நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. இந்நிலையில் டெல்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Views: - 149

0

0