மேம்பாலம் சரிந்து கார் மீது விழுந்து கோர விபத்து : 2 பேர் பலி.. அலறியடித்து ஓடிய மக்கள்!!

6 July 2021, 8:02 pm
Birdge Collapse Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் சரிந்து கார் மீது விழுந்ததால் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனக்காபள்ளியில் கட்டுமானத்தில் இருக்கும் மேம்பாலத்தின் தூண்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தூண்கள் இடிந்து விழுந்ததால் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர். பலத்த சத்தத்துடன் மேம்பாலம் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பொதுமக்கள் ஆகியோர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கார், லாரி ஆகியவை உட்பட பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி கார் ஒன்றில் இருந்த 2 பேர் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளை அகற்றி வாகனங்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Views: - 163

0

0