மம்தா பானர்ஜியுடன் கூட்டணிக்குத் தயார்..! ஒவைசியின் அறிவிப்பால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ..!

19 November 2020, 12:34 pm
Mamata_Owaisi_UpdateNews360
Quick Share

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீம் (ஏஐஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, மேற்கு வங்கத்தில், ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீமஞ்சல் பிராந்தியத்தில் ஐந்து இடங்களை வென்ற பிறகு துணிச்சலான ஒவைசி, தனது கட்சி வங்காள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

“சில வெளி நபர்கள் மக்களைத் துன்புறுத்துவார்கள், பயமுறுத்துவார்கள்’ என்று மம்தா ஏஐஎம்ஐஎம் மீது மறைமுகமான தாக்குதலைத் தொடங்கி, வெளி நபர்களை எதிர்க்க மாநில மக்களை வலியுறுத்தியதும் ஒவைசியின் அறிக்கை வந்துள்ளது.

திரிணாமுல் கட்சியின் எம்.பி. சவுகதா ராய், திரிணாமுல் கட்சியின் வாக்குகளை குறைக்க பாஜகவால் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஏவி விடப்பட்டுள்ளதாகக் கூறினார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஒவைசியின் கட்சி சமூகத்தை மேலும் அந்நியப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளும் என்று கூறினார்.

ஆனால் மேற்கு வங்க அரசு சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்நியப்படுத்துதல் மற்றும் வகுப்புவாத அரசியலை நிராகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

சவுத்ரி முன்னதாக ஏஐஎம்ஐஎம் கட்சி பாஜகவின் பி-குழுவைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் அதன் ஒரே நோக்கம் முஸ்லீம் வாக்குகளைப் பிரித்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கு சேதம் விளைவிப்பதாகும் எனக் கூறியிருந்தார்.

மேற்கு வங்காளத்தில் ஏஐஎம்ஐஎம் நுழைந்ததைக் கண்டு அச்சமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதனுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ள காங்கிரஸ், அடுத்த சட்டசபைக்கான மூலோபாயத்தை தீர்மானிக்க செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு மணி நேர கூட்டத்தை நடத்தியது.

இரு கட்சிகளும் சமூகத் தலைவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரபலங்களை அணுகும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன. டிசம்பர் 18’ம் தேதி தேசிய சிறுபான்மையினர் தினத்தன்று சிறப்பு திட்டங்களை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களான மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு தினாஜ்பூர் ஆகியவற்றில் தற்போது ஏஐஎம்ஐஎம் கவனம் செலுத்துகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 76 இடங்களில் 34 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒவைசியின் வருகையால், மதச்சார்பின்மை பேசும் மேற்கு வங்க அரசியல்வாதிகள் பரபரப்பான மனநிலையில் உள்ளனர்.

Views: - 0

0

0