எனக்கு உயிர் மீது பயமில்லை.. பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை : இசட் பிரிவு பாதுகாப்பை நிராகரித்த ஒவைசி…!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 10:53 am
Quick Share

கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நிராகரித்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மீரட் நகரில் கடந்த 3ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் பாஜகவும் தான் இதற்கு பொறுப்பு என்றும் ஒவைசி கூறினார்.

இதனிடையே, இந்த சம்பத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகத்திற்குரிய இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒவைசி மீதான தாக்குதலுக்கு பிறகு ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று நேற்று மக்களவையில் ஒவைசி தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களை வெறுப்பு மயமாக்குவது யார்? என்றும், என் மேல் தாக்குதல் நடத்தியவர்களை யூஏபிஏ சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது? எனக் கூறிய அவர், எனக்கு மரணம் குறித்து பயமில்லை என்றும், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு எல்லாம் வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

Views: - 444

0

0