இந்துத்துவா குறித்து ட்வீட்..! சர்ச்சையில் சிக்கிய அசாதுதீன் ஒவைசி..!

21 November 2020, 6:09 pm
Asaduddin-Owaisi_UpdateNews360
Quick Share

ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்பி மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் இந்துத்வா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்துக்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் இந்துத்வா என அவர் கூறினார்.

இந்துத்வா கொள்கைகளுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தாக்கிய அவர், பாராளுமன்றத்திலும், அனைத்து சட்டமன்றங்களிலும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓவைசி ஒரு ட்வீட்டில் எழுதினார், ‘ஒரு சமூகத்திற்கு மட்டுமே அனைத்து அரசியல் அதிகாரமும் இருக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு அரசியலில் பங்கேற்க எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டது இந்துத்துவா.

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் எங்கள் அதிக இருப்பு இந்துத்துவ சங்கத்திற்கு எதிரான சவாலாக செயல்படும். எங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், நாங்கள் கொண்டாடுவோம்.” என பீகார் சட்டமன்றத்தில் தனது கட்சி ஐந்து இடங்களை வென்றுள்ள நேரத்தில் ஒவைசியின் அறிக்கை வந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டதால், ஒவைசியின் இந்த அறிக்கையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் பீகாரின் ஐந்து இடங்களில் அவர் பெற்ற வெற்றி பல காரணங்களுக்காக தீவிரமாக பார்க்கப்படுகிறது. 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்ற பிறகு, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் முஸ்லீம்களின் தேசிய அளவிலான கட்சியாக வெளிவந்துள்ளது என்று கூறப்படுகிறது. கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி முஸ்லீம்களின் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார். இது மதசார்பற்ற கட்சிகள்  எனக் கூறி இஸ்லாமியர்களின் வாக்கை பெற்று வந்தவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0