சாலையில் சென்ற மினி வேன் திடீரென வெடித்து சிதறிய அதிர்ச்சி காட்சி : வாகன ஓட்டிகளுக்கு WARNING!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2021, 1:05 pm
Mini Auto Blast- Updatenews360
Quick Share

ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து மினி வேன் நொறுங்கிய நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அனபர்தி பகுதி மெடப்பாடு கிராமம் வழியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மினி வேன் ஒன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து ஏற்பட்ட விபத்தில் மினி வேனின் பின்பகுதி முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது. விபத்து நடைபெற்ற போது வேனின் பின் பகுதியில இருந்த நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மினி வேனில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 228

0

0