விசா முறைகேடு..! பாகிஸ்தானிய பெண் கைது..! உத்தரபிரதேச போலீசார் அதிரடி..!

30 August 2020, 7:16 pm
Hand_Cup_Updatenews360
Quick Share

விசா விதிகளை மீறியதாக பாகிஸ்தான் பெண் ஒருவர் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கௌதம் புத்தா நகர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நௌஷீன் நாஸ் என அடையாளம் காணப்பட்ட 36 வயது பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் தனது கணவருடன் டெல்லியில் உள்ள அஜ்மேரி கேட் வீட்டில் நீண்ட கால விசாவில் தங்கியிருந்தார். 2005’ஆம் ஆண்டில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அந்த பெண் தனது நீண்டகால விசாவின் விதிகளை மீறி நொய்டாவிற்குள் நுழைந்தார். நகரின் செக்டர் 14 ஏ’வில் ஒரு மேம்பாலத்தின் கீழ் சோதனை செய்வதற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு பேருந்தில் அவர் இருந்தார். பரிசோதனையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

1946’ஆம் ஆண்டு வெளியுறவுச் சட்டத்தின் பிரிவு 14’ன் கீழ் செக்டர் 20 காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மேலும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த பெண்ணின் விசா, நீண்ட காலம் டெல்லியில் தங்க அனுமதித்தது. ஆனால் டெல்லிக்கு வெளியே தங்க முடியாது. தேசிய தலைநகருக்கு வெளியே எங்கும் பயணிக்க அவருக்கு தேவையான அனுமதிகள் தேவை என்று போலீசார் கூறினர்.

சனிக்கிழமையன்று, அவர் மினி பஸ்ஸில் சில உறவினர்களுடன் ஒரு சுற்றுலாவிற்கு நொய்டாவின் பிரிவு 137’க்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் உத்தரபிரதேச எல்லைக்குள் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த மற்றவர்கள் பரிசோதனையின் பின்னர் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனாவுக்கு மத்தியில் மாநில அரசின் உத்தரவின் பேரில் உத்தரபிரதேசம் முழுவதும் மற்ற இடங்களைப் போலவே நொய்டாவிலும் ஊரடங்கு போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மாநிலம் முழுவதும், குறிப்பாக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில், பாதுகாப்பு சோதனைகள் தீவிரமடைந்துள்ளன. இது வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி திங்கள் அதிகாலை 5 மணிக்கு முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0