இந்தியாவை தொடர்ந்து சீண்டும் பாக்…! எல்லையில் அத்துமீறல்..! ஒருவர் பலி

1 August 2020, 1:36 pm
Terrorist_Attack_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இப்போது கொரோனா காலம் என்ற போதிலும் பாகிஸ்தான் தமது அத்துமீறலை நிறுத்தவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்.  ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய ராணுவமும் அதற்கு தக்க பதிலடி தருகிறது. தூதரக அதிகாரிகள் வழியாகவும் தமது எதிர்ப்பை இந்தியா பதிவு செய்து வருகிறது. ஆனாலும் அத்துமீறலும், தாக்குதலும் ஓயவில்லை.

இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறது. பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில்  உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது. பாக். ராணுவம் இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா முறியடித்தது. ஆனாலும் பாக். தரப்பில் ஏதேனும் உயிரழப்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பாக். ராணுவத்தின் அத்துமீறலை அடுத்து எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 6

0

0