எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்…!!

11 November 2020, 12:14 pm
pak attack india - updatenews360
Quick Share

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாக பாகிஸ்தானின் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல் 198 கி.மீ., தூரமுள்ள சர்வதேச எல்லைப்பகுதியிலும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 242 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாதமும் 350 முதல் 400 முறை அத்துமீறியுள்ளது தெரியவந்துள்ளது. ராணுவ ஆவணங்களின்படி 2017-ல் 971, 2018-ல் 1,629, 2019-ல் 3,168 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0