காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பாக்., பயங்கரவாதி சுட்டுக்கொலை…3 வீரர்கள் படுகாயம்..!!

Author: Aarthi Sivakumar
25 October 2021, 8:47 am
Quick Share

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தீவிரமாக பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் ராணுவத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று பூஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பாட்டா டுர்ரியன், மென்டார் வனப்பகுதியில் பயங்கர துப்பாக்கி சண்டை மற்றும் வெடிகுண்டுவீச்சு நடைபெற்றது. ரஜவுரியின் தன்னமண்டி பகுதியிலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்தது.

இந்நிலையில், மென்டாரில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஜியா முஸ்தபா என்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக முன்பு ஒருமுறை கைது செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது மென்டார் வனப்பகுதியில் பதுங்கியிருந்து பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டையிட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த சண்டையில் 2 காவலர்கள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Views: - 305

0

0