PAN ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு | PAN Aadhaar link

Author: Dhivagar
26 June 2021, 8:17 am
PAN-Aadhaar linking deadline extended by 3 months to 30 Sept
Quick Share

கடைசியாக PAN-ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி வருகின்ற ஜூன் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து இப்போது இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பிரிவு 139AA இன் படி, ஒவ்வொரு நபரும் தங்கள் வருமான வரி அறிக்கையில் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல புதிதாக PAN கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் ஆதார் எண்ணுடன் தான் அதை செய்ய முடியும்.

இது தவிர 1 ஜூலை 2017 முன்னதாகவே PAN ஒதுக்கப்பட்ட நபர்கள், ஆதாருடன் PAN ஐ இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஒரு நபர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவ்வாறு செய்யத் தவறினால், PAN செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது.

2021 நிதி மசோதாவில்,  அரசாங்கம் இதற்கென ஒரு திருத்தத்தையும் அறிமுகப்படுத்தியது, அதன்படி ஒரு நபர் ஆதார் உடன் PAN இணைக்காவிட்டால் ஒரு நபர் ரூ.1000 வரை தாமதமாக இணைப்பதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்நிலையில், PAN-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  

இதன் ஜூன் 30, 2021 தேதிக்குள் ஆதார் உடன் இணைக்கப்படாத அனைத்து PAN கார்டுகளும் பயனற்றதாகும். ஏனெனில், காலக்கெடு முடிந்ததும் அவை செயல்படாமல் போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் PAN எண் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்படவில்லை என்றால், ஜூலை 1 முதல் நீங்கள் எந்தவொரு நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் போகவும் வாய்ப்புண்டு.

கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் நீங்கள் இரண்டு ஆவணங்களையும் இணைக்கத் தவறினால், உங்கள் PAN செயல்படாமல் போவதோடு மட்டுமல்லாமல் உங்கள் PAN சட்டப்படி வழங்கப்படவில்லை என்று வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272B யின் படி ரூ.10,000 அபராதம் விதிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

PAN கட்டாயமா?

வங்கி கணக்கைத் திறப்பது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது பங்குகளை வாங்குவது மற்றும் ரூ.50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது என பல செயல்முறைகளுக்கு PAN கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் PAN என்பது கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு ஆவணம் தான்.

புதிய e-filing வலைத்தளத்தில் PAN ஆதார் கார்டு இணைப்பது எப்படி?

https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும்

கீழே ஸ்கிரோல் செய்து, போர்ட்டலின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘Link Aadhaar’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் இப்போது புதிய வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அடுத்து, உங்கள் பான், ஆதார் எண், பெயர் மற்றும் மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்

அனுமதி தேவைப்படும் பெட்டிகளைக் குறிக்கவும். முடிந்தவுடன் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க OTP ஐ உள்ளிட்டு, இணைக்கும் செயல்முறையைத் தொடங்கவும்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் உடன் PAN இணைப்பது எப்படி?

வருமான வரித்துறையின் தகவலின்படி e-filing portal வலைத்தளத்தைப் பயன்படுத்தி உங்கள் PAN மற்றும் ஆதார் எண்ணை ஆகியவற்றை இணைக்க முடியாவிட்டால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற ஏதேனும் ஒரு எண்ணுக்கு  >>>>[ UIDPAN (12-இலக்க ஆதார் எண்) (10-இலக்க PAN) ]<<<< என்ற வடிவில் SMS அனுப்புவதன் மூலமாகவும் இணைத்துக்கொள்ள முடியும்.

Views: - 366

0

0