சபரிமலை புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 1:09 pm
Quick Share

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்தி ஆகியோர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

latest tamil news

இதனையடுத்து, இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடந்தது. அக்., 21 ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். நாள்தோறும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடக்கும். இன்று காலை 10 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று காலை முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

latest tamil news

சபரிமலையில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மேல்சாந்தியாக மாவேலிக்கரை என்.பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வானார். அதேபோல், மாளிகைப்புறம் மேல்சாந்தியாக கோழிக்கோடு சம்பு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓர் ஆண்டுகாலம் சபரி மலையில் தங்கி பூஜை செய்வார்கள்.

Views: - 277

0

0