நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த குழப்பம் ஏற்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அநேகமாக, அடுத்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுவதாகக் கருதி, தேர்தல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை வெளியான நிலையில், நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதா..? என்பது குறித்த விவாதம் எழுந்தது.
இதையடுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள X தளப் பதிவில் கூறியிருப்பதாவது ;-சுற்றறிக்கையை குறிப்பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்பதை தெளிவுபடுத்தும்படி சில ஊடக கேள்விகள் வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே இந்த உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.