இன்று கூடுகிறது நாடாளு., குளிர்கால கூட்டர் : வேளாண் சட்டம் ரத்து உள்பட 25 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்…!!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 9:04 am
Parliment 01 updatenews360
Quick Share

டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப் போவதாகவும், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் ரத்து மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இன்றைய தினம் வேளாண் சட்டம் ரத்து மசோதா செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மட்டும் போதை மருந்து தடுப்பு மசோதா, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா ஆகியவைதான் அந்த மசோதாக்கள். தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா என 25 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

அதேவேளையில், சமையல் எரிவாயு விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு, எல்லை பாதுகாப்பு படை கூடுதல் அதிகாரம், ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Views: - 289

0

0