மற்ற துறைகள் குறித்து பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்: சச்சினுக்கு சரத்பவார் அறிவுரை..!!
7 February 2021, 11:03 amமும்பை: மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
சச்சினின் இந்த ட்விட்களுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். இந்நிலையில், மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக, சரத் பவார் அளித்த பேட்டியில்,
விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0
0