ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு அம்பலம்..? ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதி கைது..!

25 November 2020, 4:57 pm
PDP_youth_wing_president_Waheed_Parra_UpdateNews360
Quick Share

பயங்கரவாத வழக்கு தொடர்பாக பிடிபி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வாகீத் பர்ராவை தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவிலிருந்து மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பர்ராவுக்கு, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூரப்பப்டும் நிலையில், திங்கள்கிழமை முதல் என்.ஐ.ஏ தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தெற்கு காஷ்மீரில் பி.டி.பி யின் மறுமலர்ச்சிக்கு, குறிப்பாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட புல்வாமாவில், முக்கிய பங்கு வகித்த பர்ராவின் பெயர், இடைநீக்கம் செய்யப்பட்ட, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவிந்தர் சிங் வழக்கின் விசாரணையின் போது வெளிவந்தது.

“குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சதித்திட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீனை ஆதரித்ததற்காக நவீத் பாபு, தேவிந்தர் சிங் வழக்கு தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வாகீத் உர் ரஹ்மான் பர்ராவை இன்று என்ஐஏ கைது செய்தது” என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னதாக திங்களன்று, ஊடகத்திடம் பேசிய பர்ரா, தான் விசாரிக்கப்பட்ட வழக்கு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0