கம்யூனிஸ்ட்களின் மோசடி ஆட்சியால் மக்கள் சோர்வு..! கேரளாவில் அமித் ஷா அதிரடி..!

Author: Sekar
24 March 2021, 4:32 pm
amit_shah_kerala_UPDATENEWS360
Quick Share

கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) அரசாங்கங்கள் கேரளாவை ஊழலின் மையமாக மாற்றியதாகக் கூறினார்.

கேரளா சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6’ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியப் போட்டி கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே இருந்தாலும், கடந்த முறை ஒரு தொகுதியைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை வலுவாக காலூன்ற திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. 

இந்நிலையில் அமித் ஷா இன்று கேரளாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எல்.டி.எஃப் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகளால் கேரள மக்கள் சோர்ந்து போயுள்ளனர் என்று அமித் ஷா கூறினார்.

“எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் அரசாங்கங்கள் கேரளாவை ஊழலின் மையமாக ஆக்கியுள்ளன. யு.டி.எஃப் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி உள்ளது. எல்.டி.எஃப் ஆட்சிக் காலத்தில், தங்கக் கடத்தல் மற்றும் லைஃப் மிஷன்  மோசடிகள் உள்ளன.” என்று அவர் மேலும் கூறினார்.

தங்கக் கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை விளாசிய அமித் ஷா, இந்த வழக்கின் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் அவரது அலுவலகத்தில் வேலை செய்ததாக கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர், “தங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்தாரா இல்லையா? உங்கள் அரசாங்கம் இந்த குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாதத்திற்கு ரூ 3 லட்சம் கொடுத்ததா இல்லையா? இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவ உங்கள் முதன்மை செயலாளர் தொலைபேசி அழைப்புகளை செய்தாரா இல்லையா?” என்று சரமாரி கேள்வியெழுப்பினார்.

முன்னதாக, 2020’ஆம் ஆண்டில் ஜூலை 5’ஆம் தேதி தங்கக் கடத்தல் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. மாநில தலைநகரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு இராஜதந்திர லக்கேஜ்களாக மறைத்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகுப்பிலிருந்து 30 கிலோ தங்கம் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள வெள்ளத்தை கையாள்வது தொடர்பாக ஷா மாநில அரசை விளாசிய அமித் ஷா, தங்கள் சொந்த அரசியல் லாபங்களுக்காக மட்டுமே, உதவிக்காக இராணுவத்தை மிகவும் தாமதமாக அழைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

Views: - 181

0

0