திருப்பதியில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 8:49 am
Tirupati Crowd - Updatenews360
Quick Share

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது.

latest tamil news

இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் டிக்கெட்டில் இருந்து 8 ஆயிரம் டிக்கெட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Views: - 189

0

0