கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு நாளை மறுநாள் முதல் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு..!!

14 June 2021, 5:41 pm
Quick Share

புதுடெல்லி: மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு நாளை மறுநாள் முதல் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, சுற்றுலாத்தலங்கள் அருங்காட்சியங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் தரளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

v

இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Views: - 173

0

0