பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டம்: 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி..!!

22 January 2021, 10:26 am
modi awas yojana - updatenews360
Quick Share

புதுடெல்லி: பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும், அனுமதி மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் 52 வது கூட்டம் நேற்று நடந்தது. இந்த திட்டத்தில் மேலும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 606 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த கூட்டத்தில் பங்கெடுத்தன. இந்த திட்டம், மலிவு விலையில் பயனாளரின் நேரடி தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 41 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு நிலைகளில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0