கொரோனா ஒரு பக்கம்.. நிபா மறுபக்கம் : இக்கட்டான சூழலில் கேரளாவில் கல்லூரிகள் திறக்க அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2021, 4:45 pm
Kerala College Open - Updatenews360
Quick Share

கேரள மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அங்கு நிபா வைரஸ் தொற்றும் பரவியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாநிலத்தில் கல்லூரிகளை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகள் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அமையும். இருந்தபோதிலும், கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி ஆலோசனை நடத்திய பின்னரே இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 346

0

0