புதுமனை புகுவிழா நாளில் 6 குட்டிகளை ஈன்ற வளர்ப்பு நாய் : விழா எடுத்து கொண்டாடிய எஜமானர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 7:29 pm
Pups Festival- Updatenews360
Quick Share

தெலுங்கானா : புதுமனை கட்டி விழா நடத்திய நாளில் தனது வளர்ப்பு நாய் 6 குட்டிகளை ஈன்றதால் அக்கம் பக்கத்தினரை அழைத்து வளர்ப்பு நாய்க்கு விழா எடுத்து கொண்டாடிய தம்பதியின் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஊருக்குபள்ளி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் மானேஷ் தம்பதியினர் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தனர்.

அதே நேரத்தில் அவர்களுடைய வளர்ப்பு நாய் 6 குட்டிகளை ஈன்றது. எனவே கிரகப்பிரவேசத்துடன் கூடுதலாக ஆறு குட்டிகளை ஈன்ற வளர்ப்பு நாய்க்கும் விழா எடுத்து அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் ஆகியோரை வரவழைத்து விழாவாக கொண்டாடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நாய்க்கு வந்த வாழ்வ பாரு என்ற வசனத்தை நெட்டிசன்கள் கருத்துகளாக பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

Views: - 269

0

0