ராஜஸ்தானில் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை..! வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

18 February 2021, 11:41 am
petrol_diesel_updatenews360
Quick Share

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் இன்று ரூ 100.13 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 92.7 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ராஜஸ்தானில் ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் விலையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களும் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். மக்கள் அருகிலுள்ள பஞ்சாபிற்கு தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயணம் செய்கிறார்கள். ஏனெனில் பஞ்சாபில் ராஜஸ்தானை விட சுமார் 10 ரூபாய் விலை குறைவு ஆகும்.

இதற்கிடையே டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ 89.88 ஆகவும் (34 பைசா அதிகரிப்பு) ரூ 80.27 ஆகவும் (32 பைசா அதிகரிப்பு) உள்ளது. 

முன்னதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் திங்களன்று மாநில சட்டசபையில், வரிகளை குறைக்காமல் அதிக எரிபொருள் விலைக்கு விற்கப்படுவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று கூறினார். 

“நாங்கள் வரிகளை குறைத்தால் எங்கள் வருவாய் குறையும். பொது உணர்வுகளைப் பார்க்கும்போது, ​​தொற்றுநோய் இருந்தபோதிலும், அரசு 2% வாட் குறைத்து ரூ 1,000 கோடி இழப்பை ஏற்றுக்கொண்டது. இப்போது, ​​மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு வரிகளை குறைக்க வேண்டும்.” என்று அசோக் கெலாட் கூறினார்.

ஆனால் நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே மாதிரியான வரிவிதிப்பைக் கொண்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் உள்ள அதிகபட்ச வரியின் காரணமாகவே, மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை சுமார் 10 ரூபாய் அதிகமாக உள்ளது என ராஜஸ்தான் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எரிபொருளின் பம்ப் விலையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வரிகள் மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவற்றில் ஒரு பகுதி மத்திய அரசு மற்றும் ஒரு பகுதி வரி மாநில அரசால் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0

Leave a Reply