பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.
கடந்த 22ம் தேதி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில், PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள PFI அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை தொடர்ந்து நடத்தப்பட்ட கைது நடவடிக்கையின் மூலம், மொத்தம் அந்த அமைப்பைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பினால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடை விதிக்கப்படுவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை கூறியுள்ளது.
அதாவது, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பயணம் செய்தார். அந்தக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சதித் திட்டம் தீட்டி இருப்பாகவும், இதற்காக, ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து வைத்திருந்ததாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டி இருக்கிறது.
மேலும், இந்த அமைப்பினால் பல ஆண்டுகளாக ரூ.120 கோடி ரூபாய் திரட்டப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பிப்ரவரி 2020-ல் டெல்லி கலவரங்களுக்கு வழிவகுத்த பிரச்னைகள், ஹத்ராஸுக்கு பி.எஃப்.ஐ. உறுப்பினர்கள் வருகை உள்ளிட்டவற்றிற்கு இந்த ரொக்கம் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அந்த அமைப்பை தடை விதிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதோடு, PFI மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஒரு சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக செயல்படுகின்றன என்பது போல் தோன்றினாலும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மூளை சலவை செய்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் செயல்பட்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க திட்டம் தீட்டப்படுகிறது. நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட PFI, நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PFIயின் முக்கிய உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) தலைவர்கள் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும், ISIS போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் PFI அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
This website uses cookies.