பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறிய சீன ராணுவம் : பதைபதைக்க வைக்கும் புகைப்படம்..!

9 September 2020, 10:17 am
Quick Share

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டது இந்திய ராணுவம்.

லடாக் எல்லை பிரச்னை எரிமலைபோல் வெடிக்க தொடங்கியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளுக்கு இடையே இல்லாத அளவிற்கு ஆயுங்களால் ஆன பேச்சுவார்த்தை இந்தியா – சீனா இடையே முத்தியுள்ளது.

இந்த சூழலில் கடந்த திங்கள் கிழமை சீன ராணுவத்தினர் 50க்கும் மேற்பட்டோர் லடாக் எல்லையில் அத்து மீறி நுழைந்ததாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது.

தொடர்ந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சீன ராணுவம் இந்திய வீரர்கள்தான் அத்துமீறியதாகவும், இந்த போக்கை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மிரட்டும் தோனியில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதற்கு மறிப்பு தெரிவித்த இந்திய ராணுவம், சீன ராணுவம் அத்துமீறியதற்கான ஆதாரத்தை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. அந்த படங்களில் உள்ள சீன ராணுவத்தினர் கைகளில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட ஈட்டி போன்ற கொடும் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

அத்துடன் தானியங்கி துப்பாக்கிகளையும் முதுகில் சுமந்தபடி இருப்பதும் படங்களில் பதிவாகி உள்ளது. எனினும் அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் நெருங்கவிடவில்லை.

ஒருவேளை சீன ராணுவத்தினர் எல்லையை நெருங்கி இருந்தால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது போன்று மற்றொரு வன்முறை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 0

0

0