தலைசிறந்த ராணியாக திகழ்ந்தார்.. ராணி எலிசபெத் மறைவு மிகுந்த வேதனை ; பிரதமர் மோடி இரங்கல்!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 10:03 am
Quick Share

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ராணி 2ம் எலிசபெத் (96), உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் உள்ள பால்மோல் கோட்டையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்துள்ளது.

இதனிடையே, நேற்றிரவு இந்திய நேரப்படி 11:05 மணியளவில் பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிரேறன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 367

0

0