அனைத்து தரப்பு மக்களும் அமோக ஆதரவு..! தொடர்ந்து அதிகரிக்கும் மோடியின் செல்வாக்கு..! சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்..!

17 January 2021, 12:00 pm
Modi_UpdateNews360
Quick Share

2019 மே மாதம் இரண்டாவது முறை பதவியேற்ற உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி 370’வது பிரிவை ரத்து செய்தல், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள வேளாண் சட்டங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் பல தைரியமான முடிவுகளை எடுத்தார்.

எனினும் கூட, பிரதமர் மோடியின் புகழ் நாடு முழுவதும் பல மாநிலங்களில் அப்படியே உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் 44.55 சதவீத மக்கள் அவருக்கு ஆதரவளித்துள்ளனர் என்று ஐஏஎன்எஸ் சி-வோட்டர் ஸ்டேட் ஆஃப் தி நேஷன் 2021 கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து 30,000’க்கும் மேற்பட்ட பதிலளித்தவர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பிரதமர் மோடியின் கவர்ச்சி இன்னும் அப்படியே இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஒடிசா, கோவா மற்றும் தெலுங்கானா முன்னணியில் உள்ளன என்றும் கூறுகிறது.

அனைத்து 543 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி, ஒடிசாவில் சுமார் 78.05 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் பணியில் மிகவும் திருப்தி அடைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 14.03 சதவீத மக்கள் பிரதமரின் செயல்திறனில் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளதாகவும், 7.73 ஒரு சதவீத மக்கள் திருப்தி அடையவில்லை என்றும் கூறியுள்ளனர். மொத்தத்தில் ஒடிசாவில் பிரதமர் மோடியை 84.35 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி கோவா மற்றும் தெலுங்கானாவில் முறையே 80.35 சதவீதம் மற்றும் 72.03 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், பிரதமர் மோடியின் நிகர ஒப்புதல் 45.77 சதவீதமாகவும், பஞ்சாபில், பிரதமரின் பணியில் மக்கள் குறைந்த அளவிலேயே திருப்தி அடைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, பஞ்சாபில் 20.75 சதவீத மக்கள் மட்டுமே பிரதமர் மோடியிடம் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர். 14.7 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். 63.28 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. மாநிலத்தில் பிரதமர் மோடியிக்கு கிடைத்துள்ள நிகர ஆதரவு 27.83 சதவீதமாகும்.

இதே போல் தமிழ்நாட்டில், 12.59 சதவீத மக்கள் மட்டுமே பிரதமரின் செயல்திறனில் திருப்தி அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், பிரதமருக்கு நிகர ஒப்புதல் 31.99 சதவீதமாக உள்ளது.

பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் வசீகரம் அப்படியே உள்ளது. 45.56 சதவீதம் பேர் அவரிடம் மிகவும் திருப்தி அடைவதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 15.89 பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். 37.97 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை.

கேரளாவில், 33.2 சதவீதம் பேர் பிரதமரின் செயல்திறன் குறித்து மிகவும் திருப்தி அடைவதாகவும், 27.72 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைவதாகவும் கூறுகின்றனர். மாநிலத்தில் பதிலளித்தவர்களில் 39.05 சதவீதம் பேர் பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் திருப்தி அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

Views: - 0

0

0