3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி : தலிபான்களின் மாஸ்டர் பிளானுக்கு முட்டுக்கட்டை போட திட்டம்…?

Author: Babu Lakshmanan
22 September 2021, 11:58 am
pm modi 1 - updatenews360
Quick Share

க்வாட் அமைப்பின் உச்சி மாநாடு, ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் க்வாட் அமைப்பின் உச்சி மாநாடு வரும் செப்.,24ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். இன்றிரவு வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி, கொரோனா குறித்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.

pm modi - updatenews360

இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன்,ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார். மேலும், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.

இதனிடையே, ஆப்கனுக்கான ஐநாவின் புதிய பிரதிநிதியை ஏற்க வேண்டும் என்றும், ஐநா சபையில் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று தலிபான்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, தலிபான்களின் விவகாரம் தொடர்பாக, உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது.

Views: - 242

0

0