எம்பிக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!

23 November 2020, 12:44 pm
MP_House_Delhi_UpdateNews360
Quick Share

புதுடெல்லியில் டாக்டர் பி.டி.மார்க்கில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல மாடி குடியிருப்பு கட்டிடங்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்து கொண்டார்.

80 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த எட்டு பங்களாக்கள் மறு சீரமைக்கப்பட்டு, 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த பிளாட்களின் கட்டுமானம் அனுமதிக்கப்பட்ட செலவில் இருந்து சுமார் 14 சதவிகிதம் சேமிப்புடன் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கம் இருந்தபோதிலும் குறித்த நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலக்கரி சாம்பலிலிருந்து தயாரிக்கப்பட்ட செங்கற்கள் மற்றும் கழிவு மேம்பாடு, வெப்ப காப்பு மற்றும் ஆற்றல் செயல்திறனுக்கான இரட்டை மெருகூட்டப்பட்ட ஜன்னல்கள், எல்.ஈ.டி விளக்குகள், ஒளி கட்டுப்பாட்டுக்கான சென்சார்கள், ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல பசுமை கட்டிட முயற்சிகள் கட்டுமானத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 

மேலும் குறைந்த மின் நுகர்வுக்கான வி.ஆர்.வி அமைப்பு, நீர் பாதுகாப்பிற்கான குறைந்த ஓட்டம் சாதனங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கூரையில் சோலார் பேனல்கள் போன்ற சிறப்பு வசதிகளுடன் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் மூலம் எம்பிக்கள் பாராளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்லும்போது தங்குவதற்கு, தற்போது நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் தயார் நிலையில் உள்ளது.

Views: - 24

0

0

1 thought on “எம்பிக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!

Comments are closed.