கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுடன் மோடி கலந்துரையாடல்..!

22 January 2021, 4:10 pm
Modi_Interacts_Corona_Vaccine_Beneficiaries_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடனான உரையாடலில், கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்களையும் தவறான எண்ணங்களையும் அகற்றுமாறு வலியுறுத்தினார்.

“டாக்டர்களும் சுகாதார ஊழியர்களும் தடுப்பூசிக்கு உறுதி கொடுக்கும்போது, அது தடுப்பொசிகளின் செயல்திறனைப் பற்றி மக்களிடையே மிகவும் வலுவான செய்தியை அனுப்புகிறது.” என்று அவர் வீடியோ கான்பெரன்ஸ் கூட்டத்தின் போது கூறினார்.

இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட அல்லது மற்றவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய சுகாதார பயிற்சியாளர்கள் பங்கேற்று, தங்கள் முதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

உண்மையில், கொரோனா வீரர்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளனர் என்று மோடி தனது 30 நிமிட உரையாடலில் கூறினார். அப்போது ஒரு மருத்துவமனை சுகாதார பணியாளர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஒரு மருத்துவர் தடுப்பூசி போட்டபின் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று மோடியிடம் தெரிவித்தனர்.

தடுப்பூசி போடுவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நடந்து வருகிறது. எங்கள் முன்னணி கொரோனா வீரர்கள் நாடு முழுவதும் தடுப்பூசி போடுகிறார்கள்” என்று மோடி வியாழக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

“இந்த தொடர்பு அவர்களின் அனுபவங்களையும் கருத்துக்களையும் கேட்க முதல் வாய்ப்பை வழங்கும்” என்று அவர் கூறினார்.