“மோடி என் மகன்”..! 100 செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஷாஹீன் பாக் போராளி மகிழ்ச்சி..!

25 September 2020, 7:00 pm
Modi_Bilkis_UpdateNews360
Quick Share

சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஷாஹீன் பாக் போராட்டங்களில் கலந்து கொண்ட 82 வயதான பில்கிஸ் 2020’ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் டைம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 

82 வயதான இவர் தனது இரண்டு நண்பர்களான 90 வயதான அஸ்மா கட்டூன் மற்றும் 75 வயதான சர்வாரி ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் ஷாஹீன் பாக் எதிர்ப்புத் தளத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் குளிர்காலத்தை தைரியமாக எதிர்கொண்டு இந்த மூவரும் சமூக ஊடகங்களில் “ஷாஹீன் பாக் டாடிஸ்” என்று பாராட்டப்பட்டனர்.

டிசம்பரில் தொடங்கிய இந்த போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஒரு கூடாரத்தின் கீழ் அமர்ந்து, போராடினார். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் முன்மொழியப்பட்ட தேசிய பதிவுக்கு எதிரான போராட்டத்தின் முகமாக அவர் வெளிப்பட்டார்.

கொரோனா வைரஸ் வெடித்ததையும், பின்னர் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்த ஊரடங்கையும் கருத்தில் கொண்டு ஷாஹீன் பாக் நகரில் நடந்த எதிர்ப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

டைம் இதழ் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் செல்வாக்கு செலுத்தும் 100 நபர்களின் பட்டியலை வெளியிடுகிறது. அதில் இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி இடம்பெற்றதோடு மட்டுமல்லாமல், சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 82 வயதான பில்கிஸும் இடம்பெற்றுள்ளார்.

பில்கிஸ், பிரதமர் மோடியை “என் மகன்” என்று அழைப்பதோடு அவரை சந்திக்க அழைக்கப்பட்டால் மகிழ்ச்சி கொள்வதாக தற்போது தெரிவித்தார்.

2020’ஆம் ஆண்டில் டைம் இதழின் 100 மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக அங்கீகரித்திருப்பதற்கு 82 வயதான அவர் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். இருப்பினும் மோடியை சந்திக்கும் கோரிக்கை நிறைவேறியிருந்தால் அதிகம் மகிழ்வுற்றிருப்பேன் எனத் தெரிவித்தார்.

Views: - 7

0

0