கொல்கத்தா விக்டோரியா மெமோரியலில் நேதாஜிக்கு அஞ்சலி..! மோடி மற்றும் மம்தா பானர்ஜி பங்கேற்பு..!

23 January 2021, 4:57 pm
Modi_Netaji_Kolkatta_UpdateNews360
Quick Share

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை கௌரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை துணிச்சல் தினமாக கொண்டாட, பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் உள்ளார். பிரதமரை வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் பிற அதிகாரிகளுடன் வரவேற்றனர். 

கொல்கத்தாவில் தரையிறங்கி நேராக நேதாஜியின் இல்லமான நேதாஜி பவனுக்கு பிரதமர் மோடி விஜயம் செய்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தேசிய நூலகத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து விக்டோரியா மெமோரியலில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

இதற்கிடையே சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸை நினைவுகூரும் வகையில் துணிச்சல் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கு பதிலாக தேஷ் பிரேம் திவாஸ் என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்நிலையில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை கௌரவிப்பதற்காக வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடி, வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோருடன் விக்டோரியா மெமோரியலில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் இன்று கொல்கத்தா செல்வதற்கு முன்பு, அசாம் சென்று அங்கு, ஒரு லட்சம் பழங்குடியினருக்கு, நிலப்பட்டா உரிமத்தை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0