அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி முதல்முறையாக சந்திப்பு : வெள்ளை மாளிகை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
21 September 2021, 8:17 am
Quick Share

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுனான பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் செப்.,24ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் க்வாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அவர் இந்த வாரம் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, வெள்ளை மாளிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவையும் அவர் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 157

0

0