குடியரசு தலைவரை திடீரென சந்தித்த பிரதமர் மோடி!

15 July 2021, 9:59 pm
Quick Share

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தார். பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தில் இருந்து திரும்பிய சில மாணிநேரங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, குடியரசு தலைவரிடம் முக்கிய விவகாரங்கள் குறித்து விளக்கமளித்ததாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 111

0

0