இந்திரா காந்தியின் 36’வது ஆண்டு நினைவு தினம்..! நினைவஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி..!

31 October 2020, 9:42 am
Modi_Pays_Tributes_To_Indira_Gandhi_UpdateNews360
Quick Share

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 36’வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில் பிரதமர், நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று கூறினார்.

“நம் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஜி அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும், பிரதமர் மோடி தனது மாதாந்திர மான் கி பாத் வானொலி உரையில் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“அக்டோபர் 31’ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியை இழந்தோம். நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் அப்போது கூறியிருந்தார்.

பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி, 1984 சீக்கியர்களின் பொற்கோவிலில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை வீழ்த்த, பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

இதனால் சீக்கியர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், 1984’ஆம் ஆண்டில் அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 15

0

0

1 thought on “இந்திரா காந்தியின் 36’வது ஆண்டு நினைவு தினம்..! நினைவஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி..!

Comments are closed.